×

தாரபுரத்தில் நாளை மாபெரும் இலவச மருத்துவ முகாம்

கோவை, மே.28: கேஎம்சிஎச் மருத்துவமனை, தாராபுரம் தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபாவுடன் இணைந்து, தாராபுரத்தில் உள்ள வாசவி மஹால், பெரியகடைவீதி(கேவிபி வங்கி அருகில்) பகுதியில் மாபெரும் இலவச மருத்துவ முகாமை நாளை(29ம் தேதி) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்தவுள்ளது.இந்த முகாமில் இருதய மருத்துவம், நரம்பியல் மருத்துவம், எலும்புமுறிவு மற்றும் மூட்டு மருத்துவம், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கேஎம்சிஎச் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கவுள்ளனர். மருத்துவ ஆலோசனை, சர்க்கரை பரிசோதனை, பேப் ஸ்மியர் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, பிஎம்டி பரிசோதனைகள் இலவசாமக இம்முகாமில் இலவசமாக செய்யப்படும். மேலும் விபரங்களுக்கு 7339333571, 9361912213 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Tags : Dharapuram ,
× RELATED கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள் தலைமை ஆசிரியை, ஆசிரியை சஸ்பெண்ட்